Posts

Showing posts from September, 2023

பருப்பொருள் என்றால் என்ன

பருப்பொருள் என்றால் என்ன  பருப்பொருள்   3 வகைப்படும். பருப்பொருள் நம்மைச் சுற்றி உள்ள பொருள்கள் அனைத்தையும், இப்பொருள்களில் உண்டாகிற யாந்திரிக, பௌதிக, இரசாயன, உடலியல் வகைப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் பொருள்வகைப் புலப்பாடு ( Material phenomena ) என்றும், அல்லது வெறுமே பருப்பொருள் ( Matter ) என்றும் சொல்வது வழக்கம் [1] . இந்த அண்டமும் அதில் அடங்கியுள்ள அனைத்தும்  பொருட்களால்  ஆனவை. பொருள் அல்லது பொருள்கள் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பருப்பொருள், சடப்பொருள் ஆகிய சொற்களும் பயன்படுத்தப்படுவதுண்டு. இவ்வண்டத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும்  தனிமங்களாலும்ம்  அவற்றின்  சேர்வைகளாலும்  ஆனவை. ஒவ்வொரு தனிமமும் வேறுபட்ட  அணுக்  கட்டமைப்புகளைக் கொண்ட அணுக்களால் ஆனது. அணுக்கள்  இலத்திரன் ,  புரோத்தன் ,  நியூத்திரன்  ஆகிய கூறுகளால் ஆனவை. அக்கூறுகள்  குவார்க்  எனப்படும் அடிப்படைக் கூறுகளால் ஆனவை. இக்கூறுகளை மேலும் கீழ்மட்டமாக நோக்குகையில் அங்கு  விசை  அரங்கு செயற்படுகின்றது.